இன்றைய ராசிபலன் – 12 ஏப்ரல் 2024

Rasi-palan-new12
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். சேமிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். முயற்சிகளில் சின்ன சின்ன தோல்விகள் உண்டாக்கும். மனசு வருத்தப்படும். இன்றைய நாள் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கும். அனுசரித்து செல்லுங்கள். மனது உடைந்து போகக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடுங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செய்யும் வேலை தொழில் எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். ஆனால் சொந்த பந்தங்களோடு பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நேர்மையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வாழ்க்கைத் துணையிடம் தேவையில்லாத எல்லா விஷயத்தையும் உலரி வைக்க வேண்டாம். சில நினைவு தெளிவுகளை அறிந்து முறையாக பேசுவது இன்று உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லதை செய்யும். கூடுமானவரை இன்று உங்கள் வாழ்க்கை துணை இடம் எந்த பிரச்சினையை பற்றியும் பேசாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் இருக்கும். தேவை இல்லாத சிக்கல்கள் வந்து தொல்லை கொடுக்கும். இதனால் உடல் சோர்வு ஏறப்படும். எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஆர்வம் காட்ட முடியாது. புதிய முயற்சிகள் எடுப்பதை நாளை தள்ளி போடவும். அனுபவ சாலிகளிடம் கொஞ்சம் அறிவுரை கேளுங்கள். நீங்களாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் செய்த முயற்சிக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். சுப காரிய செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் தொல்லை உங்களை விட்டு விலகிவிடும். எல்லா விதத்திலும் சந்தோஷம், மன நிம்மதி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு தூர சென்று விடும். வயதானவர்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும். பழைய ஞாபகங்கள் மனசுக்கு இதமாக இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு கஷ்டமான வேலையை கொடுத்தாலும், அதை சுலபமாக முடித்து விடுவீர்கள். பாராட்டுகள் குவியும். எதிரிகளை வீழ்த்தக் கூடிய அளவுக்கு உங்களுடைய திறமை மேலே உயர்ந்து நிற்கும். உங்களோடு போட்டி பொறாமையோடு இருப்பவர்களை எல்லாம் இன்று ஒரு கை பார்த்து விடுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் சீராக இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைத்து விடுவீர்கள். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். அடமானத்திலிருந்து நகைகளை மீட்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றவர்களுடைய பேச்சை தாண்டி எந்த ஒரு முடிவும் எடுக்காதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சுயநலமோடு யோசிப்பீர்கள். எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் அடுத்தவர்களுடைய நன்மையைப் பற்றி யோசித்துக்கூடபார்க்க மாட்டீர்கள். இதனால் புது எதிரிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. சொந்த பந்தங்களை கூட எதிரியாக மாறலாம். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்லுங்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் பணிவோடு பேசவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபத்தை ஈட்டி எடுப்பீர்கள். உங்களுடைய ஐடியாக்களின் மூலம் நிறைய லாபகரமான நன்மைகள் நடக்கும். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும். சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்றைய நாளை சீக்கிரமாக தொடங்க வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. செலவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். உறவுகளை உதாசீனப்படுத்த கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரத்தில் நல்ல செய்தி வருவது போல இருந்தாலும், போகப் போக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முக்கியமான வேலைகளை காலையிலேயே முடித்து விடுங்கள் மாலை நேரத்தில் கூடுமானவரை எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் உஷாராக இருக்கவும். உடன் வேலை செய்பவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து அயராது உழைக்க வேண்டும். அப்போதுதான் நிதி நிலைமையை சீர் செய்ய முடியும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும், வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளிடம் பொய் சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு பிரச்சனையை கொடுத்து விடும் ஜாக்கிரதை.

- Advertisement -