இன்றைய ராசி பலன் – 12-10-2019

Rasi Palan

மேஷம்:

mesham

இன்று உங்கள் ராசிக்கு பலன் தரக்கூடிய கிரகங்கள் சுப கிரகங்களாக இருப்பதால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

rishabam

- Advertisement -

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

Midhunam

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கடகம்:

Kadagam

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். மாலையில் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்:

simam

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மாலையில் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தியைக் கேட்பீர்கள். மாலையில் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:

magaram

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமைப்படக்கூடிய செய்தி கிடைக்கும். சகோதரர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது சற்று தள்ளிப் போகும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மீனம்:

குருபலம் இருப்பதால் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய காரியங்களை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும், குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்