மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அளவில் பாராட்டுக்கள் கிடைக்கப் போகிறது. உங்களுடைய வேலையில் உங்களுக்கான தனிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் உயரும். இதுநாள் வரை நீங்கள் விட்டுக் கொடுத்த இடத்தை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். சுய கௌரவத்தோடு நடப்பதற்கு இந்த நாள் உங்களுக்கு உதவி செய்யும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. வியாபாரம் செய்வதற்கு, முதலீடு செய்வதற்கு கூட இன்று கடன் வாங்காமல் இருப்பது நல்லது. சிவன் வழிபாடு செய்யுங்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று மௌனமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று காரியத்தில் மட்டும் குறிக்கோளாக செயல்படுவீர்கள். நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். அமைதி உங்களுக்கு ஆர்பாட்டம் இல்லாத வெற்றியையும் பெற்றுத் தரப் போகிறது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வருமானம் பெருகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் சீராக எப்போதும் போல நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். சேமிப்பு உயரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகமாக இருக்கும். உற்சாகத்தோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய மனிதர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் புதிய உறவுகள் உங்களோடு சேருவார்கள். திருமண வாழ்க்கை இனிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். இதுநாள்வரை விட்டுக் கொடுத்த விஷயங்களை சேர்த்து படித்து, இன்று ஜெய்த்து காட்டுவீர்கள். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். மனது நிம்மதி அடையும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த மனகசப்பு நீங்கும். நல்லது நடக்கும் நாள் இன்று.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். உங்கள் மனதில் நீண்ட நாள் பதுக்கி வைத்திருந்த காதலை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக கைகூடி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமையாக சிந்திப்பீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். தந்திரத்தோடு செயல்படுவதால், தோல்வி அடைவதாக இருந்த பல காரியங்கள் இன்று வெற்றி அடையப் போகிறது. நிறைய பாராட்டுகள் கிடைக்கும். இல்லற வாழ்க்கை இனிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கசப்பு இருக்கும். உடல் சோர்வு இருக்கும். பிடித்தவர்களிடமிருந்து பாசிட்டிவ் ஆக எந்த பதிலும் வரவில்லை என்ற ஏக்கம் இருக்கும். இருந்தாலும் கவலைப்பட கூடாது. விடா முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் வேலையாக இருந்தாலும் சரி, சொந்த விஷயமாக இருந்தாலும் சரி, நிச்சயம் கடவுள் உங்களுக்கு வெற்றியை தேடி தருவான்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். சிவன் வழிபாடு செய்வது உங்களுக்கு இன்று அதிக பலனை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தீராத குழப்பத்தில் இருந்து வெளிவருவீர்கள். உங்களுடைய மனது ரொம்ப ரொம்ப தெளிவா இருக்க போகுது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பெருசாக எந்த அலைசலையும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வீர்கள். நல்ல சாப்பாடு இருக்கும். நல்ல தூக்கம் இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்புகள் வராது. நீங்கள் செலவை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்க.