இன்றைய ராசி பலன் – 14-04-2021

rasi palan - 14-4-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் நடக்க வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் பெறலாம்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான பலன்கள் கொடுக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான ஒரு வரவேற்பு இருக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். கணவன் மனைவி அன்பு மேலும் அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன்களை கொடுக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எவரையும் எளிதில் எடைபோடும் உங்கள் ராசிக்கு சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை புகுத்துவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண புது யுக்திகளை கையாளுவதாக அல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் உடல் ரீதியான பிரச்சனைகள் தீரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி பிரச்சனை தீர விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களே பகையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுபாடு மேற்கொள்வது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 14-4-2021.

- Advertisement -