இன்றைய ராசி பலன் – 14-4-2020

rasi palan - 14-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாலையில் நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். வெளிநாடுகளிலிருந்து பண வரவை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றமான நாளாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் எல்லா புது முயற்சிகளும் வெற்றியடைய இறைவன் அருள் துணை நிற்கும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது வரலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். நீண்ட நாளாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். மருத்துவத்துறை ஆராய்ச்சித் துறை தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் தொழிலில் மேன்மை அடைவீர்கள். சகோதரர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். காதல் வகையில் விழுந்து இருப்பவர்களுக்கு பல நல்ல நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. வயதானவர்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களின் கல்வி சற்று கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் மனதில் எழும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்திலும் நிம்மதியான நாளாக இன்று இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளது. பிரிவினையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும். வழக்கு விஷயங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அனுகூலமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை உங்கள் கண்முன் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் என்றாலும் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலான கவனம் தேவை. விட்டுக் கொடுத்து அனுசரித்து போவது குடும்ப நிம்மதியை பாதுகாக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாகவே அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகள் உண்டாகலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் பேச்சில் நிதானம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் முயற்சிகளையும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்காலத்தைப் பற்றிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகளை மனதில் வரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -