இன்றைய ராசி பலன் – 15-08-2020

rasi palan - 15-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகம் தரக் கூடிய நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் மேலும் காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக நடைபெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும்.

- Advertisement -

ரிஷபம

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட கூடிய நாளாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு தன்னம்பிக்கையைத் தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகளின் வழியை அனுகூலமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் காணப்படும். பெண்களுக்கு பணிச்சுமை கூடுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இல்லத்தில் சுப செய்திகள் கிடைக்கக்கூடிய அமோகமான நாளாக இருக்கும்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனம் மகிழும்.கொடுக்கல் வாங்கல் தொடர்பானவற்றில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நாளாக இருக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகன வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பேசும் வார்த்தையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதாக அமைப்பு இருக்கிறது. எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் மனம் மகிழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். சக கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். விநாயகரை வழிபடுவது சிறப்பான நாளாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் மேலோங்கி இருக்கும்.கூடுமான வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு. பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும். நினைத்த இடத்திலிருந்து வரன் அமைய கூடும். எதிர்பாராத விஷயங்கள் நடக்க கூடிய வாய்ப்புகள் ஒரு சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய அமைப்பாக அமைந்துள்ளது. பயணங்களின் பொழுது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்த நேரத்தில் கைகூடி வரும். கடன்கள் படிப்படியாக குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் தடங்கல் வந்தாலும் வெற்றிகரமாக முடியும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் பண வரவு வருவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் உண்டு. குடும்பத் தேவைகள் யாவற்றையும் சுலபமாக பூர்த்தி செய்து விடுவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -