இன்றைய ராசி பலன் -16-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
எதிர்பாராத பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள். அரசாங்க காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்த படியே அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
இன்று அனுகூலமான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். அலுவலகதில் வழக்கம் போல் பணிகள் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பகர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடியுங்கள் எடுங்கள். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுப்பெறுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

கடகம் :
புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். சிலர் குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்:
simam
வாழ்க்கைத்துணைவியால் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாலையில் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கன்னி:

மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகலாம். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

துலாம்:

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவகத்தில் வழக்கமான பணிகளே காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அரசாங்கம் சார்ந்த காரியங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று பொறுமையாய் கடைபிடிக்க வேண்டிய நாள்.

தனுசு:

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
magaram
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். நண்பர்களால் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக அமையும்.

கும்பம்:

வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் குடும்பத்தில் வீண்செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு தடங்கல் வந்து போகும், அதனால் விற்பனை பாதிக்காது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்:

மகிச்சியான நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -