Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 16-02-2019

12-rasi
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மாலையில் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பொறுமை அவசியம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் மட்டும் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். காலைப் பொழுது இதமாக விடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி:
Kanni Rasi

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும். பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

தனுசு:
Dhanusu Rasi

சிலருக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியில் போகும்போது பொருள்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். பேசும்போது பதற்றம் வேண்டாம். பூராடம் நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் தேவையறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மீனம்:
meenam

நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -