இன்றைய ராசி பலன் – 16-05-2018

rasi palan

மேஷம்:

Mesham Rasiவெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

ரிஷபம்:

Rishabam Rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்:

midhunamஅனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். தேவையான பணம் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

கடகம்:

Kadagam Rasiகாரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

சிம்மம்:

Advertisement

simmamஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவும் உண்டு. தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படும்.

துலாம்:

Thulam Rasiபுதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். நண்பகல் முதல் கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்:

virichigamஇன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு:

Dhanusu Rasiபுதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம்:

Magaram rasiநினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்:

Kumbam Rasiஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

Meenam Rasiஇன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

இன்றைய ராசி பலன் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.