இன்றைய ராசி பலன் – 16-5-2020

rasi palan - 16-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் லாபம் வழக்கம் போலவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் யார் நல்லவர்கள் என்பதை கண்டறிவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றி புதிய ஆட்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிச் சுமையை அதிகரிக்கக் கூடும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.புது வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களால் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். பிள்ளைகளின் கல்வியிலும் மனைவியின் உடல் நலத்திலும் அதிகம் அக்கறை தேவை.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் நாளாகும். தாய்வழி உறவினர்களால் சிறு சிறு மனக்கசப்பு ஏற்படகூடும். திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அமைய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களின் பேச்சால் சில காரியங்களை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் செய்யும் வேலையால் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிப்பதால் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு வாக்குவாதம் ஏற்படும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சிறிது மனக்குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் வியாபாரிகளால் சிறிது தடைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்டும் முயற்சிகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கக்கூடும். கொடுத்த கடன்கள் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் உங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். உங்கள் குடும்பத்தில் நீங்கள் முக்கிய நபராக விளங்குவார்கள். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒத்துழைப்பை அதிகரிக்க கூடும். பிள்ளைகளுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கக்கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமையால் அலைச்சல் ஏற்படும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கும் நாளாக அமைகிறது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். உங்கள் பிரச்சனைகள் அனைத்திலும் சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களின் உதவியை நாடுவார்கள். உங்கள் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பணவரவு உண்டாகும். உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்பு படிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். பிராத்தனைகள் நிறைவேற்றுவதால் தெய்வீக அனுகூலம் கிடைக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். உங்களுக்கு பணி இடமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதை சமாளித்துவிடுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும் நாள். முன்கோபத்தால் சிலவற்றை இலக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உத்தியோகத்தில் ஊழியர்களால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் அனைத்தும் தீர்வுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வழக்கம் போலவே இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணத் தேவைகள் பூர்த்தி அடையும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்.மனைவிவழி உறவினர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கக்கூடும். வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரியிடம் சிறிது மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.