இன்றைய ராசி பலன் -17-02-2018

12-rasi

மேஷம்:
mesham

சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகும். புதிய முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த செய்தியால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம்:
rishabam
அரசாங்கம் சார்ந்த காரியங்களால் அனுகூலம் உண்டகும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை படியே நடந்து கொள்வார்கள், அது உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்ளக்கூடும் .

மிதுனம்:
தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணம் வந்து சேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிட்டும். சிலர் புதிய பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட லாபம் கூடுதலாக கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கடகம் :
Kadagam
புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பும் குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:
simam

- Advertisement -

வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் செய்விர்கள். தந்தை வழி சொந்தங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று வீண்செலவுகளை குறைத்து கொள்ளுங்கள், இல்லையென்றால் கடன் வாங்க நேரிடும் .

கன்னி:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். பெற்றோர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். சகோதரர்களால் இன்று மனக்கஷ்டம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கம் சார்ந்த காரியங்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

துலாம்:

பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத பணம் வந்து சேரலாம். நண்பர்களால் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் இன்று சுமாராகத்தான் இருக்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

விருச்சிகம்:

குடும்பத்தாரின் தேவைகளால் செலவுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த செய்தி மாலைக்குள் வந்து சேரும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டிற்கு செல்வீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு:

அரசாங்கம் சார்ந்த காரியங்களில் தாமதம் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். நண்பர்களால் சிலர் அறிமுகம் ஆவார்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில், எதிர்பார்த்தை விட கூடுதல் வருமானம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மகரம்:
magaram
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபடாதீர்கள், அது நஷ்டத்தில் முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக அமையும்.

கும்பம்:

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவுகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் இன்று வரக்கூடும். மாலையில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தாருடன் இன்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்:

மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். அதேசமயம் செலவுகளும் உண்டாகும். மனைவி வழி உறவுகள் உங்கள் உதவி நாடி வருவார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.