Rasi palan : இன்றைய ராசி பலன் – 17-05-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக பணியாளர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதல் தரும். உறவினர்களால் உதவி உண்டு. தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று உற்சாகமான நாளாக அமையும். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு மகான்களை தரிசித்து அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். உற்சாகமான நாள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

காலையில் சற்று சோர்வாக இருந்தாலும், முற்பகலுக்கு மேல் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்:
Magaram rasi

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக்கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். உறவினர்களால் சஞ்சலம் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.

மீனம்:
meenam

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -