இன்றைய ராசி பலன் – 17-08-2020

rasi palan - 17-8-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும் நாளாக அமையும். அலுவலகத்தில் பணி புரிவோர் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் சாதகமாகும். உறவினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். முருகன் வழிபாடு நன்மை உண்டாக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி பெற தைரியத்தோடு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சஷ்டி விரதம் மேற்கொண்டால் ஆரோக்கியத்தில் ஏற்றம் காணலாம்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை. உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் புரிவோருக்கு சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நரசிம்மர் வழிபாடு நிறைவான இலாபத்தை ஏற்றுக் கொடுக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பண வரவு கிடைக்கும் நாளாக அமையும். மனைவி மற்றும் பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நல்ல நாளாக அமையும். நீண்ட நாள் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். சுய தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தடைகளை தகர்த்தெறியும் தைரியம் உண்டாகும். எல்லாவிதமான பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பலன் காணப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமாக காணப்படும். எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடன் இருப்பவரோடு வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நேரிடும். கால பைரவர் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பம் மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தினருடன் ஆலோசிப்பது நல்லது. வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். அரசாங்க பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். முருகப் பெருமானை வழிபட்டு வர மன அமைதி கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் இறக்கம் நிறைந்த நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் வழியில் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவன் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதி நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பண பரிமாற்றங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ராகு கேது வழிபாடு குடும்பத்தில் அமைதியை கொடுக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் தொடங்க நல்ல நாளாக அமையும். புது புது முயற்சிகளால் லாபம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியே ஆதாயம் கிடைக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. புதிய பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு தனவரவு கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வும் தளர்வும் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளை முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது மகிழ்ச்சி கொடுக்கும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு செய்து வர தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே நல்ல அன்னியோன்னியத்தை உருவாக்கும் ஒரு சிறந்த நாளாக அமையும். பல நாட்களாக நீடித்து வந்த கடன்கள் தீரும். பொருளாதாரத்தில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். பைரவர் வழிபாடு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.