இன்றைய ராசி பலன் – 16-10-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

mesham
உற்சாகமான நாளாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

- Advertisement -

ரிஷபம்:

rishabam
இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

Midhunam
தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படக்கூடும்.

- Advertisement -

கடகம்:

Kadagam
கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

simam
சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:


புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் வெற்றியும் எதிர்பாராத அனுகூலமும் உண்டாகும்.

துலாம்:


அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம்:


உற்சாகமான நாளாக இருக்கும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மாலையில் உறவினர்களுடன் பேசி மகிழும் வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு:


மனம் உற்சாகமாகக் காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். குரு பகவானின் அருளால் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகக்கூடும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:

magaram
இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். தாயின் அன்பும் ஆதரவும் சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்கு மாலையில் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அஷ்டமத்தில் இருப்பதால் எதிலும் பொறுமை அவசியம்.

கும்பம்:


வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்குத் தாய்மாமனின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும்.

மீனம்:


உற்சாகமான நாளாக இருக்கும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களைத் தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு அமையும்.

இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்

- Advertisement -