இன்றைய ராசி பலன் – 17-6-2020

rasi palan - 17-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களும் இன்று வெற்றிகரமாக நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். சில சிக்கல்கள் வந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் அதனை முறியடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். உயர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. உங்கள் பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடிவரும். வெளிநாடு பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களால் பண உதவி கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நிதி நிலைமை நன்றாக இருக்கும். கணவன் மனைவியை பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்திற்காக எடுக்கும் எந்த முயற்சிகளும் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். சுப செய்திகள் மகிழ்ச்சியை தரும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியை தரும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இன்று மனக் குழப்பத்துடன் செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பாசமாக இருப்பார்கள். பெரியவர்கள் உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஒரு சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். வாய்ப்புகள் உள்ளது வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சுப விரயச் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதையும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. நீங்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வார்த்தையில் நிதானம் தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த சொத்து விவகாரங்கள் நல்ல முறையில் நடக்கும். பணவரவு அதிகரிப்பால் வங்கியில் சேமிப்புகள் உயரும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தெய்வவழிபாடு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்கு அன்னதானம் செய்வதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை விஷயமாக வெளியில் செல்லும்போது சில பிரச்சினைகள் சந்திக்க நேரலாம். வியாபாரம் விஷயமாக நண்பர்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். இன்று வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் இன்று சிறப்பாக நடைபெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செலவிடுவதில் கவனம் தேவை.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. வீட்டில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று நீங்கள் மௌன விரதம் இருக்கவும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருப்பதால் எந்த செயலை செய்தாலும் வெற்றியை தரும். பெரியோர்களை மதித்து செயல்படுவது மிகவும் நல்லது. அக்கம்பக்கத்தில் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இனிவரும் காலங்களில் சிந்தித்து செயல்படுவது உங்கள் வியாபாரத்திற்கு பக்கபலமாக இருக்கும் நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஜெயம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும் மனக் குழப்பங்கள் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வேலைவாய்ப்புகள் பெறுவீர்கள். சுபகாரியங்களில் மகிழ்ச்சி உண்டாகும். எதை செய்தாலும் பெரியோர்களை ஆலோசித்து செய்வது மிகவும் நல்லது. அனைத்து விஷயங்களிலும் வெற்றி அடைவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரம் செய்யும் இடத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் வந்து விலகும். நீங்கள் மன தைரியத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. எதையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். செலவுகள் சிறிது அதிகரிக்கும். பணவரவு தாமதமடையும் எந்த ஒரு விஷயத்திற்காகவும் மனம் தளராமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் மனத் துணிச்சலுடன் செயல்படுவது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.