இன்றைய ராசி பலன் – 18-1-2020

rasi palan - 18-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு வெற்றிகிட்டும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சக பணியாளர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எதிலும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. அவசரம் ஆபத்தை தரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சங்கடங்கள் உருவாகி மறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். வெளி நபர்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுபகாரியப் பேச்சுக்கள் சுபமாக முடிவு பெறும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் விற்பது வாங்குவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் விரயங்கள் சங்கடங்களை உருவாக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி பயில்வோர் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வீட்டு பொருட்களை வாங்கும் யோகம் காணப்படுகிறது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தொடங்குவது வெற்றியை தேடி தரும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான இடத்தைப் பெறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வதால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். பெண்கள் குடும்ப நபர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வழக்குகளில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் புரிவோருக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மனதுக்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நீடித்திருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மேற்க்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தள்ளி வைப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. பள்ளிப்படிப்பை பயில்வோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி பயில்வோர் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஞாபக மறதியால் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். எச்சரிக்கை தேவை. விநாயகரை வழிபடுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்குவது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவுகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் தென்படலாம். விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி பயில்வோர் புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு இருப்பவர்கள் வெற்றியைக் காண்பீர்கள். சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். பொறுமையை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர் தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். மனதிற்கு பிடித்தவர்களால் மன அழுத்தம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு அதனால் சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு வெற்றி கிட்டும். பொருளாதாரம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடும்ப நபர்கள் அனுசரித்து செல்வது நல்லது. அம்பிகையை வழிபடுவது இன்றைய நாளை சிறப்பாக்கி தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான ஒரு நாளாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு பணி இடமாற்றம் கோரி விண்ணப்பித்தோர்க்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் வேண்டி இருப்போருக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். பெற்றோர் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உயர்கல்வி பயில்வோர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த இடத்திலிருந்து தனவரவு திருப்திகரகமாக இருக்க பெரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து இனிமையாகப் பேசுவது சிறந்த நாளாக உண்டாக்கித் தரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களால் திருமண பேச்சுவார்த்தை நடைபெறலாம். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வெளிநாடு வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் ஆதாயம் கிட்டும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பி எந்த வாக்குறுதியையும் கொடுத்து விடக் கூடாது. உயர்கல்வி பயில்வோர் வேலைவாய்ப்பு கருதி விண்ணப்பித்திருந்தால் வெற்றிகிட்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுப்பதன் மூலம் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து இன்முகத்துடன் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நபர்களின் சந்திப்பால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வெற்றியில் முடியும். உடன்பிறந்தவர்களால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி உண்டாகும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை தேடித்தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையை கடைபிடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிட்டும். புதிய தொழில் முயற்சி செய்வோர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். உயர்கல்வி பயில்வோர் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்கின்ற குழப்பத்தில் இருப்பார்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

- Advertisement -