இன்றைய ராசி பலன் – 18-3-2021

rasi palan - 18-3-21

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிறு கவலை மனதை ஆட்கொண்டு வருத்தி எடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிக்க போராடுவீர்கள். அரசு வழிக் காரியங்கள் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியம் பிறக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும் வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் உங்களுடைய கை ஓங்கியிருக்கும் இனிய நாள் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராதவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் ஏற்றமான சூழ்நிலை வரும். புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய உத்திகளைக் கையாள்வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இந்த நாளில் கடன் தொகைகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் குட்டையாக நட்பு வட்டம் அதிகரித்து காணப்படும். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் உணர்ச்சிவசப்படும் அதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பாதிப்புகள் இருக்காது. உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் தடை இல்லாமல் நிறைவேறும் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்கள் மூலம் சில நல்ல விஷயங்கள் நடைபெறும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய போட்டி பொறாமை கொள்பவர்களை எதிர்க்கும் வல்லமையை வளர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி இருக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பதற்கான யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தில் தேவையில்லாத விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்தவிதமான முன் யோசனையும் இன்றி முடிவை எடுப்பது நல்லதல்ல. காரிய வெற்றி உண்டாக விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் 15 மனம் கவர்ந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து பரஸ்பர அன்பு மேலோங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பின் அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறைந்து ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சனை தீர பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்