இன்றைய ராசி பலன் – 18-5-2020

rasi palan - 18-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக தொழிலாளர்களிடம் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். புதிய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாகும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடுதலான லாபம் அளிக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டு. தெய்வ வழிபாடு நன்மை தரும். இன்று நீங்கள் மனச்சோர்வுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பம் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மனதில் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி கிடைக்கும். உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதால் நிம்மதி கிடைக்கும். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் வந்து நீங்கும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை உதவியாக இருப்பார். இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அரசாங்க பணிகள் அனைத்தும் சுலபமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கக்கூடிய நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது. வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். தாயின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சிகள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரக்கூடும். பிள்ளைகளுக்கு பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது மிகவும் நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். எதிலும் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில செலவுகள் வந்து நீங்கும். தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். தெய்வ வழிபாடு மன நிம்மதி அளிக்கும். எந்தவித முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நீண்ட நாளாக வராத பணம் கைக்கு வந்து சேரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பீர்கள். கடன் கொடுப்பது மிகவும் நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.