Rasi palan : இன்றைய ராசி பலன் – 19-05-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

அதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

இன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் தாய்வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

கன்னி:
Kanni Rasi

தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
virichigam

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

இன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

உற்சாகமான நாள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மீனம்:
meenam

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -