Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/06/2019): முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் கிடைக்கும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பொறுமையுடன் இருக்கவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்:
midhunam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு தொண்டையில் சிறு உபாதை ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் ஒரு சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும்.

துலாம்:
Thulam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். எதிரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:
meenam

தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -