இன்றைய ராசி பலன் – 19-6-2020

rasi palan - 19-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும் செலவுகள் மிக அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு தாமதமாக நேரலாம். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் நிதானம் தேவை. மன தைரியத்துடன் இருப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் மனம் தளராமல் தைரியத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. வியாபாரம் அமோகமாக இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரம் சம்பந்தமான எந்த முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். வழக்கமான பணிகளை தொடரலாம். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எந்த முடிவு எடுத்தாலும் பெரியோர்களை ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மையை தரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வீர்கள்நீங்கள். உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியத்தையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உங்கள் நண்பர்கள் மூலம் நல்ல செய்தி வரும் வாய்ப்புகள் உள்ளது. தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இன்று எந்த வித அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களிலும் பொறுமையாக செய்வது மிகவும் நல்லது. சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல வகையிலும் அனுகூலமான நாளாக இது உங்களுக்கு அமையப்போகிறது. நீங்கள் நீண்ட நாளாக மனக் குழப்பத்துடன் இருந்த விஷயங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் கைகூடும். நண்பர்கள் உதவிக் கேட்டு வருவார்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான அனைத்து காரியங்களும் நல்ல முறையில் நடந்து முடியும். நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். நீண்ட நாளாக இருந்து வந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். காதல் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயலை செய்தாலும் அதில் பதற்றம் இல்லாமல் செயல்பட வேண்டும். தாய் தந்தையிடம் பின் மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பேசும்போது வார்த்தையை நிதானமாகப் பேசுவது மிகவும் நல்லது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. நீங்கள் வெகு நாளாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் அனைத்தும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அவ்வப்போது சோர்வு உண்டாகும். உறவினர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது மிகவும் நல்லது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஒருசில நன்மைகள் ஏற்படலாம். உங்களுடைய பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். உங்கள் வியாபாரம் அமோகமாக இருக்கும். பணம் வரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் அக்கறையாக இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் கைகூடும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாளாக வராத கடன் தொகை வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களுடைய அதிகாரியின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகளை முறியடிப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. கடவுள் வழிபாடு நிம்மதியை அளிக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது மிகவும் நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. வியாபாரம் சுமாராக தான் இருக்கும். எதை செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது மிகவும் நல்லது. நீங்கள் எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.