இன்றைய ராசி பலன் – 2-2-2021

rasi palan - 2-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சமயோசித புத்தியால் முன்னேற்றத்தை காணலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளின் மூலம் ஏற்றத்தை காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் நபர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும். நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய மேலதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் கடன் தொகைகள் வசூலாகும். ஆரோக்கியத்தின் இருந்து வந்த சீரற்ற நிலை மாறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாங்கிய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும் அற்புதமான நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உங்கள் தரப்பு நியாயங்களை சரியாக எடுத்து வைத்தால் மட்டுமே நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் வரும் துயரங்களை எதிர்க்கும் தன்னம்பிக்கை வலுவாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விஷயங்கள் மனதிற்கு பாரமாக அமையும். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை பொறுமையாக கையாளுவது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களிடம் இருந்து வந்த சேமிப்பு தொகை கரைய ஆரம்பிக்கும். சிக்கனத்தை மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த சுமூகமான சூழ்நிலை தொடரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அடுத்தவர்களின் கதையை கேட்டு மனம் கலங்குவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய திறமை பன்மடங்கு பெருகும். கணவன் மனைவி இடையே இருந்த ஊடல் நீங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களை எதிரியாக மாறுவார்கள் எனவே எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றிக் கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பலிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். விடாமுயற்சிக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுக்கும் படியாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த சில விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலங்கள் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை கட்டுப்படுத்தலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் மூலம் ஆதரவான முடிவுக்கு வரலாம். ஆரோக்கியத்தில் மற்றும் உணவு கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -