இன்றைய ராசிபலன் – 20 ஆகஸ்ட் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் வெளியூர் பயணங்களால் லாபங்கள் இருக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழும். பெரிய மனிதரின் நட்பால் நன்மை ஏற்படும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிகள் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும். பணவரவில் இழுபறிநிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் சிறக்கும். சிலர் கோயில் பணிகளில் ஈடுபட்டு புண்ணியங்கள் சேர்ப்பார்கள். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மனச்சோர்வு ஏற்படும். சிலருக்கு காரிய தடைகள் ஏற்படக்கூடும். வாகன பயணங்களின் பொழுது கவனம் தேவை. சராசரியான வருமானம் இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் வீண் விரயங்கள் ஏற்படும். ஒரு சிலர் கடன் வாங்கும் சூழலும் உருவாகும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் தாராள பணவரவு இருக்கும். திருமண வயது பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். சித்தர்களின் ஆசிகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு உண்டாகும். சொத்து விவகாரங்களில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பாரா செலவுகள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. பெண்கள் வழியில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் லாபம் இருக்காது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகள் குறித்த கவலைகள் இருக்கும். சிலருக்கு வருமானம் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

- Advertisement -