இன்றைய ராசி பலன் – 21-08-2020

rasi palan - 21-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி மிக்க நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சஞ்சலங்கள் நேரிடும். குரு பகவானை வழிபட்டு வர மனக்கவலைகள் அகலும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். முகத்தில் சற்று தொய்வு ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புது நட்புகள் கிடைக்கும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் மேற்கொள்ள நல்ல நாளாக இருக்கும். தந்தை வழியில் நற்செய்திகள் வரும். பூர்வீக சொத்து பிரச்சனை நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிறரிடம் பொறுமையாக பேசுவது நன்மை தரும். வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அர்த்த நாரீஸ்வரரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எழுச்சி மிகுந்த நாளாக காணப்படும். பல நாட்களாக இழுபறியில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும். புது உத்வேகத்துடன் தன்னம்பிக்கையோடும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. சூரியன் வழிபாடு சிறப்பு உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முடிவுகளை எடுக்கக் கூடிய நாளாக அமையும். இல்லத்தில் சுப காரியங்கள் கைகூடி வரும். பணவரவு அதிகரிக்கும். புதிய வீடு மனை சொத்து வாங்க வாய்ப்பு உண்டாகும். வாய்வு சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும். அம்மன் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலமான நாளாக காணப்படும். தொழிலில் சற்று மந்தமாக காணப்பட்டால் புதிய முயற்சிகளால் லாபமடைவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நல்ல பண்பு உண்டாகும். சித்திபுத்தி விநாயகரை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் செய்வோர் புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நவக்கிரக வழிபாடு தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகமாக ஏற்படும் நாளாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசியல் வழியில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. நந்தி பகவானை வணங்கி வர சங்கடங்கள் தீரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். உறவினர்கள் வருகையால் நற்செய்திகள் வரும். வாகன பராமரிப்பு செலவு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் நல்ல நாளாக அமையும். திரௌபதி அம்மன் வழிபாடு இல்லத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்புமிக்க நாளாக அமையும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். லக்ஷ்மி அம்மனை வழிபட்டு வர பண பிரச்சனை விலகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் குழப்பங்கள் ஏற்படும் நாளாக அமையும். புது முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. அரசுத் துறையில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு பணிஉயர்வு வாய்ப்பு உண்டு. கணபதியை வழிபட்டு வர சங்கடங்கள் அகலும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் ஏற்றங்கள் ஏற்படும் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சித்தி புத்தி விநாயகரை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -