மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், என்று இந்த நாள், நல்ல அனுபவங்களை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும். வேலையிலும் வியாபாரத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது, சுமூகமான போக்கு நிலவும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பண பிரச்சனை தீரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீண் விரைய செலவுகள் குறையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்க வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டாம். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். ஆனால் பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கும் தெம்பை கடவுள் உங்களுக்கு கொடுப்பார். மனித ரூபத்தில் யாராவது ஒருவர் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்வார்கள். நல்ல ஆதரவை பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். ப்ரோமோஷன்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். விவசாய தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சக மனிதர்களோடு பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகள் வெற்றி தரும். நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். பகை விலகும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காண்பீர்கள். தேவையில்லாத கெட்ட விஷயங்கள் உங்களை விட்டு தானாக விலகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளை செய்வதற்கு முன் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். தெரியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தெரியாத வேலை தொழில் எதுவாக இருந்தாலும் அதில் கால் வைக்காதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். நிம்மதி பிறக்கும். இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தானாக விலகி விடுவீர்கள். தேவையில்லாத சிந்தனை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு ஈடுபடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் டென்ஷனுடன் தான் இருக்கப் போறீங்க. முன்கோபம் அதிகமாக வரும். சொந்த பந்தங்களோடு பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இன்று நீங்கள் நிதானத்தை இழக்கக் கூடாது. அளவோடு பேசுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நிம்மதி கிடைக்கும். ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு, தூக்கம் என்று இந்த நாள் நல்ல அனுபவம் கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.