இன்றைய ராசிபலன் – 22 மார்ச் 2024

- Advertisement -

மேஷம்


மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சி ஏற்படும்.தொழில், வியாபார ரீதியிலான விடியங்களில் வெற்றி உண்டாகும். பெண்களின் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிறர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சிலர் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். பணிச்சுமை கூடும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது நிறைவேறும். பெண்களால் பொருள் வரவு இருக்கும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் தொலைதூர ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

கடகம்


கடக ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். அரசாங்க ரீதியிலான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிட மாறுதல் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாராளமான பொருள் வரவு ஏற்படும்.

கன்னி


கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்கு இன்றைய தினம் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவார்கள். கோர்ட் வழக்குகளில் நல்ல முடிவு உண்டாகும்.

விருச்சிகம்


விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் தடுமாற்றம் இருக்கும். பொருள் வரவுகளில் இழுப்பறி நிலை ஏற்படும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு


தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரி நிலையே இருக்கும். பண விவகாரங்களில் புதியவர்களை நம்ப வேண்டாம். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மகரம்


மகர ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலர் வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள்.

கும்பம்


கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பணிச்சுமை கூடும். உடலிலும், மனதிலும் மந்த நிலை இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வாகனங்கள் வழியில் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.

மீனம்


மீன ராசியினர் இன்று துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.

- Advertisement -