இன்றைய ராசி பலன் – 20-10-2019

Rasi Palan

மேஷம்:
Meshamஇன்று உற்சாகமான நாளாக அமையும். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabamஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்:
Midhunamதந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

கடகம்:
kadagamஇன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும், ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்:
Simmamஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி:
Kanniவாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பயணம் தவிர்க்கவும்.

துலாம்:
Thulamமுக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்:
Viruchigamபுதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusuதாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரய சந்திரனால் திடீர் செலவுகள் ஏற்படுவதன் காரணமாக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

மகரம்:
Magaramஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கும்பம்:
Kumbamசகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மீனம்:
Meenamஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்குப் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.