- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 22 அக்டோபர் 2025

இன்றைய ராசிபலன் – 22 அக்டோபர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிதானமாக சிந்தித்தால் நிறைய நல்லது நடக்கும். அவசரப்பட்டால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெரிய மனிதர்களை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். வெறும் வேகம் மட்டும் இன்று போதாது. இன்று விவேகமும் தேவைப்படுகிறது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கை நிறைய பணம் வரும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய முதலீடுகள் செய்யலாம். சொத்து சுகம் வாங்கலாம். மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் நிறைந்த நாள். இன்று சுப காரிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகமாக வரும். நிதானம் இருக்காது. இதனால் சில பல இழப்புகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பயணத்தில் உண்டாக கூடிய நட்புறவின் மூலம் பிரச்சனைகள் வரலாம் ஜாக்கிரதை.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேரத்திற்கு உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். மனநிறைவோடு இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை தான். திறமைகள் வெளிப்படும் நாள். சாதுரியமாக செயல்பட்டு பெரிய பெரிய பிரச்சனைகள் கூட சுலபமாக சரி செய்தீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். எதிர்பாராமல் நீங்கள் செய்யும் சின்ன வேலை, எதிர்காலத்தில் பெரிய அளவில் நல்ல லாபத்தை கொடுக்கும். புதிய முதலீடுகளை செய்யுங்கள். புதிய சேமிப்புகளை துவங்கலாம். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான நன்மைகளை இன்று மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தானதர்ம காரியங்களில் ஈடுபடுபீர்கள். உறவுகளுக்கு விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகள் செய்யலாம். எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அடையும்.

விருச்சகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகமும் ஊக்கமும் இருக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். நேரம் போவதே தெரியாது. ஆனால் வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்துடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பது நல்லது. கைபேசியை அதிகம் பயன்படுத்தாதீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். ரொம்ப நேரம் வேலை செய்து சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்கவும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. இளைஞர்கள் என்று கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் சீராகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். குழந்தைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவன குறைவு வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி தேவை. சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்படக்கூடாது. உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்கு தேவைப்படுகிறது. ஆகவே யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சற்று முன்