இன்றைய ராசி பலன் – 23-10-2020

rasi palan - 23-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் பழைய விஷயங்களை கடந்து புதிய பயணத்தைத் தொடங்குவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற இடங்களில் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளின் எதிர்கால விஷயத்தில் சில திட்டங்களை தீட்டுவது அக்கறை கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய மேலதிகாரிகளின் தொந்தரவுகளால் டென்ஷன் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு புதிய பொறுப்புகள் கூடி வரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைவரின் பாராட்டையும் பெறுவதற்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான விஷயங்களில் மற்றவர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

சிம்மம்
Leo zodiac signசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது மூலம் இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளை முடிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் அதிகம் காணப்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்கள் பலவீனத்தை உண்டாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு புது உற்சாகத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமாளித்து வந்த பிரச்சனைகள் மேலும் வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சாதகப்பலன் உண்டாகும். பெண்கள் உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எதிர் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை அதிகரிக்க போராடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் முயற்சிகளை முறியடிக்க சிலர் முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பு உயரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களால் நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகார வர்க்கத்தினர் ஆதிக்கம் செலுத்துவதால் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் எச்சரிக்கை தேவை.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சாதகமற்ற பலன் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. கவனக்குறைவால் சில தவறுகளை செய்ய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் தங்களுடைய பொறுமையை இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகும் எனினும் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதற்கு சாத்தியக்கூறு உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு நன்மைகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்றம் இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்கள் மேல் நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கு சாதக பலன் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதரவை வலுவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கும். தொழில்முறை போட்டி பொறாமை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.