இன்றைய ராசி பலன் – 23-5-2020

rasi palan - 23-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில செலவுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. அரசு சம்பந்தமான பணிகள் அனைத்தும் நல்ல முறையில் முடியும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சுபநிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சில செலவுகள் ஏற்படும். பணவரவு உண்டாகும். சிக்கனமாக இருப்பது மிகவும் நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வைத் தரும். புதிய தொழில்கள் முயற்சி செய்வீர்கள். சுபகாரியங்கள் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். வெளிநாடு பயணங்களால் புதிய நட்பு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தாய் தந்தையிடம் அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் காட்டுவது மிகவும் நல்லது. மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். உறவினர் உதவியால் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் நல்ல முறையில் முடிவடையும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆனாலும் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் பணிச்சுமை குறையும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையும். சகோதரர்களிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லது. உதிரியான பணிகளால் அனுகூலம் உண்டாகும். உங்களுடைய வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். யாரையும் நம்பி எந்த கடனுதவியும் கொடுப்பது தவிர்க்க வேண்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அலைச்சல்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களுடன் அனுசரணையாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன உளைச்சல்கள் அதிகமாகும். செய்யும் வேலையில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வீண் விவகாரங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மனைவிவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. வெளிநாடு பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படலாம். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதை செய்தாலும் மன தைரியத்துடன் செய்ய வேண்டும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன சங்கடங்கள் ஏற்படும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். எதை செய்தாலும் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.