இன்றைய ராசி பலன் – 24-07-2020

rasi palan - 24-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமையும். இழுபறியில் இருந்து வந்த பணப் பிரச்சினைகள் சாதகமாக முடியும். புது முயற்சிகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சம்பளம் இத்தனை நாளாக காணப்படும். புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பழைய சொத்து பிரச்சினைகள் தாமதமாக வாய்ப்பு உண்டு. சுற்றத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சந்திர பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர வெற்றியைப் பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீகத் தளங்களுக்கு செல்ல கூடிய நாளாக ஆமையும். பழைய கடன் பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வழியே வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகன ஓட்டிகள் கவனம் தேவை. வராகி அம்மன் வழிபாடு நல்ல அனுகூலத்தை கொடுக்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமையும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர். உறவினர்கள் வருகையால் நற்செய்திகள் வரும். வாகன பராமரிப்பு செலவு ஏற்பட வாய்ப்புண்டு. விநாயகருக்கு எருக்கம் மாலை சாற்றி வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். முகத்தில் சற்று தொய்வு ஏற்படும். உடன் பணியாற்றுபவர்கள் இடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குருபகவானை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் மிகுந்த நாளாக காணப்படும். தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும்.மனைவி மற்றும் பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நல்ல நாளாக அமையும். லக்ஷ்மி அம்மனை வழிபட்டு வர பண பிரச்சனை விலகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை தீர்க்கும் நாளாக அமையும். குடும்பத்தினருடன் அனுசரித்து போவதால் நல்ல பலனைப் பெறுவீர்கள்.கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணம் விஷயத்தில் தனிப்பட்ட முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நவக்கிரகத்திற்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் இல்லத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றத்தை ஏற்படுத்தும் நாடாக அமையும். புதிய தொழில் தொடங்குவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். வாகனம் மனை போன்ற பொருட்களை வாங்க சூழல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. அம்பாளை வணங்கி வர நிலையான லாபத்தை ஈட்டுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வான நாளாக காணப்படும்.எளிதில் முடிக்க கூடிய காரத்தையும் தாமதமாக முடிக்க நேரிடும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். தொழில் புரிவோர் தங்களின் கீழ் பணி புரிவோர் உடன் அனுசரித்துப் போவதால் நல்ல திருப்திகரமான சூழல் உண்டாகும். குபேர பகவானை வழிபடுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரையம் நிறைந்த நாளாக இருக்கும். பணப் புழக்கத்தில் கவனம் தேவை. வீன் பயணங்களை மேற்கொள்ள தே தவிர்க்கவும். துணிச்சலோடு சில காரியங்களை செய்ய சூழல் ஏற்படும். பிள்ளைகளின் வழியே மகிழ்ச்சி அடைவீர்கள். வராகி அம்மனை வழிபட்டு வர இல்லத்தில் நிம்மதி நிலவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள சூழல் ஏற்படும். அரசு துறையில் பணி புரிபவரகள் சக ஊழியர்களிடம் ஆதரவைப் பெறுவர்கள்.தொழில் புரிவோருக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாராகி அம்மன் வழபாடு நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். தொழிலில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பண வரவு செலவில் கவனம் தேவை. வாகன ஓட்டிகள் பயணத்தின்போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே நிலவிவந்த பிரச்சனைகள் விலகும். சந்திர பகவானை வணங்கி வர இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -