- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 24 அக்டோபர் 2025

இன்றைய ராசிபலன் – 24 அக்டோபர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுபகாரிய விஷயங்களைப் பற்றி வீட்டில் பேச்சுவார்த்தைகள் துவங்கலாம். நல்லது நடக்கும். பிள்ளைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு நடக்க வேண்டும். யாரிடமும் போட்டி போடக்கூடாது. சண்டை போடக்கூடாது. வாக்குவாதம் செய்யக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. காலையில் வேலையை துவங்குவதற்கு முன்பு ஐந்து நிமிடம் சிவனை, கண்களை மூடி தியான நிலையில் அமர்ந்து கும்பிடுங்க நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று வரவு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராது வரும் சந்தோஷம் உங்களுடைய மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். பிடித்த நபரை சந்திக்கலாம், அல்லது இனிப்பான செய்தி செவிகளில் விழலாம். பாராட்டு கிடைக்கலாம். ஏதோ ஒரு நல்லதை கடவுள் உங்களுக்கு கொடுக்க போகின்றான். என்ஜாய் பண்ணுங்க. வேலையில் மட்டும் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள் அவசரப்பட வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். தைரியத்தோடு இருப்பீர்கள். பிரச்சனைகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை விலகும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். மழை நேரத்தில் வெளியில் செல்லும்போது கவனமாக இருங்க. சின்ன சின்ன காயங்கள் படுவதற்கு மட்டும் வாய்ப்பு உள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுமூகமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் அந்தந்த நேரத்தில் நடந்து முடியும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மன நிம்மதியும் இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற பதட்டம் பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். இருக்கும் வேலை, வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்வது நல்லது. தெரியாத புது மனிதர்களை நம்பி உங்களுடைய குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை ஒரு மணி நேரத்திற்கு முன்கூட்டியே துவங்க வேண்டும். தேவையற்ற தாமதத்தால் பிரச்சனைகள் வரும். பஸ் புக் பண்ணி இருக்கீங்க, ட்ரெயின் புக் பண்ணி இருக்கீங்க அப்படின்னா முன்கூட்டியே கிளம்பிருங்க அதுதான் இன்றைக்கு நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகமான நாளாக இருக்கும். எவ்வளவு வேலை உங்கள் தலை மேல் இருந்தாலும், நீங்கள் ரிலாக்ஸா இருப்பீங்க. அந்தந்த வேலையை அந்த நேரத்தில் சரியாக முடித்துக் கொடுப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் டென்ஷன் இருக்கும். முன்கோபம் வரும். நிதானத்தை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நேர்வழியில் நடந்து கொள்ளுங்கள் யாரையும் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கவே நினைக்காதீங்க. எதிரிகளையும் அனுசரிக்க வேண்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள். வருமானம் அதிகரிக்கும் நாள். அடமானத்தில் இருந்த பொருட்களை மீட்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியே கொடுக்கும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் டென்ஷன் குறையும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதிநிலைமை சீராகும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

சற்று முன்