- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 26 அக்டோபர் 2025

இன்றைய ராசிபலன் – 26 அக்டோபர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளில் பின்னடைவு ஏற்படும். விடுமுறை நாள் என்பதால், நல்ல சாப்பாடு, நல்ல ஓய்வு கிடைக்கும். இருந்தாலும் முக்கியமான வேலைகளை மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்ய வேண்டும். கவன குறைவு இருக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும் மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கப் போகிறது. புதிய முதலீடுகளை செய்யலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. குடும்ப உறவுகளோடு கவனமாக பேசுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் நல்ல நாளாக இருக்கும். பொறுமையான நாளாக இருக்கும். பெருசாக எந்த வேலையிலும் அவசரம் இருக்காது. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். கோவிலுக்கு சென்று மனநிம்மதியை அடைவீர்கள். ஆன்மீக ரீதியாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் அவசரமான நாளாக இருக்கும். போட்டிகள் பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாத தூங்க முடியாது. அந்த அளவுக்கு வேலை பளு சில பேருக்கு அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுக்கு இன்று ஓய்வு இருக்காது. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். வாக்குவாதம் ஏற்படும். இருந்தாலும் கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கப் போகின்றான். பிரச்சனைகளை சமாளிக்க தைரியத்தை கொடுக்க போகின்றார். ஆகவே மன உறுதியோடு செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தேவையற்ற மன குழப்பம் இருக்கும். வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. தேவையற்ற சலனத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றால் இறை வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். பிடித்த நபரோடு ஐந்து நிமிடம் பேசுங்கள் நிச்சயம் மனது தெளிவு அடையும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வீட்டில் நீண்ட நாட்களாக செய்ய முடியாத கிடப்பில் போட்டு கிடந்த வேலைகளை கூட எடுத்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சந்தோஷம் பிறக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பமான பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை புரிந்து கொள்வதற்கு உண்டான சந்தர்ப்பங்களை கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார். நல்லதே நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்த நல்ல காரியங்கள் இன்று தேர்ச்சி பெறும். உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். சுபகாரியத் தடை விலகும் சந்தோஷம் பிறக்கக்கூடிய நாள். வியாபாரத்திலும் வேலையிலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களுடைய அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும். வேலையிலிருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தை பொறுத்த வரை நிதானம் தேவை. அவசரப்பட்டு முதலீடு செய்யாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன சங்கடங்கள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த நபரை பிரிவதன் மூலம் கொஞ்சம் மன கசப்பு ஏற்படும் பாத்துக்கோங்க .

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வான நாளாக இருக்கப் போகிறது. வேலையில் கவனம் செலுத்த முடியாது. நீண்ட தூர பயணங்களின் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்ய முடியாத சூழ்நிலை உண்டாகும். இறைவழிபாடு செய்யுங்கள். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சற்று முன்