இன்றைய ராசி பலன் – 26-10-2020

rasi palan - 26-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்கள் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சாதகமான பலன்கள் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றிவர நல்லது நடக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அம்பிகை வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். குடும்பத்தில் இருக்கும் இளையவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. சனிக்கிழமை பெருமாளை தரிசனம் செய்வது நல்ல பலன்தரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபப்படுவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில தொல்லைகள் வந்து சேரும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும் விஷயத்தில் சாதக பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய விஷயங்களை செயல்படுத்துவீர்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொருட் தேக்கம் ஏற்படாது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நேர்மையான குணம் கொண்ட உங்கள் ராசிக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைப்பதில்லை தாமதம் ஏற்படலாம். உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் நம்பிக்கையாக இருப்பவர்களே ஏமாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பண ரீதியான விஷயங்களில் சற்று கவனம் தேவை.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் அவமானங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கப் போவதில்லை. நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் முன்னேற்றம் பெறலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.