இன்றைய ராசி பலன் – 27-01-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
இன்று பள்ளி நண்பர்களுடன் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாருடன் உறவினர்களின் வீட்டுக்கு செல்விர்கள். இன்று வீண்செலவுகள் ஏற்படும்.பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள்.இன்று நீங்கள் எதிர்பார்த்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
உறவினர்கள் வருகையால் செலவு ஏற்படும், பின்பு சமாளித்துவிடுவீர்கள். சிலர் குடும்பத்துடன் பயணம் செய்விர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரதில் நல்ல லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகள் ஏற்பட்டும்.

மிதுனம்:
Midhunam
இன்று இனிமையான நாள். சகோதரர்கள் மூலம் நல்ல செய்தி வரும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். உங்கள் தந்தை மூலம் காரியம் கைகூடும். சிலருக்கு செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கல் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

கடகம் :
குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டுக்கு செல்விர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். உங்கள் மனைவியுடன் கோவிலுக்கு செல்விர்கள். தாய் வழி உறவுகள் மூலம் நன்மை சேரும் .உங்களின் முயற்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவகத்தில் இன்று பாராட்டு பெறுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.

சிம்மம்:
simam
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர்கள் மூலம் செலவுகள் ஏற்படக்கூடும்.

கன்னி:

சிலர் வெளியூர் பயணம் செய்து, அங்கிருக்கும் கோயில்களை தரிசிக்க வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் மூலம் செலவு ஏற்படும். வழக்கமான வேளைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலக வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பிர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழும்.

துலாம்:

குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

தனுசு:

உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். உங்களை மகிச்சியாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். நாளின் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
magaram
மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய செயல்களில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்:

அரசு பணிகளை செய்யும் போது பொறுமையை கடைபிடியுங்கள். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தில் வரவேற்பு கிடைக்கும். மனைவியுடன் சில மண கசப்புகள் ஏற்பட்டு விலகும். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகளை செய்விர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழும்.

மீனம்:

பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -