இன்றைய ராசி பலன் – 27-09-2020

rasi palan - 27-9-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு காரணமாக அசதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும். வெளியூர் செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையப் பெறும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க பெறும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் மேலோங்கி காணப்படும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை தரும். பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிதாக தொழில் புரிபவர்களுக்கு சாதகப் பலனை தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காணலாம். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஆதரவுடன் இருப்பதால் தன்னம்பிக்கை மிகுதியாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வருமானம் சிறப்பாக இருக்கும். நிலுவையில் இருக்கும் கடன் தொகைகள் தடையின்றி வசூலாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் உருவாகக்கூடும். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் லாபம் காணலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சீராகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத நண்பர்களின் உதவியால் உங்களின் கனவு நனவாக வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் இழுபறியில் இருந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய முதலீடுகள் செய்வதில் கவனத்துடன் இருக்கவேண்டியது நல்லது. உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்களின் இரக்க குணத்தால் நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படும். குடும்பத்தில் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். விக்னங்களை தீர்க்கம் விநாயகரை வழிபடுவது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமான முடிவு தரும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயர கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பயணங்கள் மூலம் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும். முருகப் பெருமானை வழிபட நிம்மதி இருக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்களின் முன்கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திப்பீர்கள். அதிகம் பொறுமையை கடைபிடித்தால் மன நிம்மதி பெறலாம். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நலம் தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தள்ளி வைப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.