இன்றைய ராசி பலன் – 27-6-2020

rasi palan - 27-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றத்தை உருவாக்கும் மிகச் சிறந்த நாளாக அமையும். நண்பர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பண பரிமாற்றங்களை தவிர்ப்பது நல்லது. மனைவி பெற்றோர்களிடம் ஆலோசித்து புதிய முதலீடு செய்வது நல்லது. சந்திர பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர வெற்றியைப் பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரியத்தடைகள் உடைய நாளாக இருக்கும். ன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் இறக்கங்கள் ஏற்படும். வராகி அம்மன் வழிபாடு நல்ல அனுகூலத்தை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள கூடிய நாளாக அமையும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளிடையே அக்கறை காட்டுவது நல்லது. குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. விநாயகருக்கு எருக்கம் மாலை சாற்றி வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் லாபம் காணும் நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. குருபகவானை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு அதிகரிக்க கூடிய நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணி புரிவோர் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். லக்ஷ்மி அம்மனை வழிபட்டு வர பண பிரச்சனை விலகும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டம் நிறைந்த நாளாக அமையும். நண்பர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பண பரிமாற்றங்களை தவிர்ப்பது நல்லது. நவக்கிரகத்திற்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் இல்லத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் வழியில் செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. சிவன் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். குடும்பத்தினருடன் ஆலோசிப்பது நல்லது. பழைய உறவுகள் திரும்பி வரும். வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். குபேர பகவானை வழிபடுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவும். பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மை தரும்வராகி அம்மனை வழிபட்டு வர இல்லத்தில் நிம்மதி நிலவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமையும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளிடையே அக்கறை காட்டுவது நல்லது. சந்திர பகவானை வணங்கி வர இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது நட்புக்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். ராகு கேது வழிபாடு இல்லத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பு மிக்க நாளாக அமையும். எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் விலகும். வயிற்றுப் மற்றும் வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீதேவி தாயாரை வணங்கி வழிபட்டுவர கடன் தொல்லைகள் நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -