இன்றைய ராசி பலன் – 28-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு வைத்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் எதிர்ப்பார்த்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவுகள் வருகையில் செலவுகள் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

மிதுனம்:
Midhunam

அனுகூலமான நாள். இன்று புது முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்வது சிறந்ததாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

கடகம் :
Kadagam
சகோதரர்கள் உங்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:
simam

உற்சாகமாக நாள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலக பணிச்சுமையால் கூடுதல் நேரம் வேலைபார்ப்பீர்கள். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும் பொது கவனமாக இருங்கள்.

கன்னி:

தந்தை வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தருவீர்கள். சகோதரர்கள் உதவி தேடி வருவார்கள். இன்று மகான்களின் ஆசி பெறுவீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். மலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். தந்தை வழி உறவுகள் வருகையால் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாகும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் பிரச்சனைகள் வந்து விலகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மகரம்:
magaram
புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. அரசாங்கம் சார்ந்த பணிகள் அனுகூலமாகும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். நண்பர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவியின் ஆலோசனைகள் தேவைப்படும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைசெலுத்துங்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரதத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாக அமையும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போதும் கவனமாக இருங்கள்.

மீனம்:

புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தாரால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலக பனி சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -