இன்றைய ராசிபலன் – 28 ஆகஸ்ட் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார மேம்பாடுகள் ஏற்படும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியியல் சிறப்படைவார்கள். கடன் சுமைகள் தீரும். சகோதர வழி உறவுகள் ஆதரவு இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலனில் கவனம் தேவை. தொலைதூரப் பயணங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியங்கள் சுலபத்தில் வெற்றிகரமாக முடியும். நண்பர்களால் தன வரவு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் இன்பங்கள் பெருகும். பொருளாதார கஷ்டங்கள் தீரும். வாழ்க்கைத் துணை ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபங்கள் இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். பழைய நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். சிலர் விருந்து விஷேடங்களில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் அனுகூலங்கள் இருக்கும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் துன்பங்கள் ஓடிப்போகும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கும். கலைத் தொழிலில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் யோகமான நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். பால்ய கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் கவலைகள் தீரும். உங்கள் திறமையால் நன்மைகளைப் பெறுவீர்கள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களால் தன வரவு உண்டாகும். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.

மகரம்:

மகர ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது நிறைவேறும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தாராள பண வரவு உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் வார்த்தைகளில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கும். சராசரியான பொருள் வரவு உண்டு. தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். பெரியவர்களின் ஆதரவு இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -