இன்றைய ராசி பலன் – 3-3-2021

rasi palan - 2-3-21

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். சாதகமற்ற அமைப்பு என்பதால் வாகன ரீதியான பயணங்களில் கவனம் தேவை. சுய தொழிலில் மந்தநிலை காணப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் இருப்பதால் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் யோகம் ஒரு சிலருக்கு வாய்க்கப் பெறும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு பல வழிகளிலும் வந்து பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வீண் பழி சுமப்பதை தவிர்க்க நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்வுடன் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனைகள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பொருட்களை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. துறுதுறுவென எதையாவது செய்துவிட்டு வீண் பழிகளை சுமக்க நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய லட்சிய பாதையில் பயணிக்க கூடிய வெளிச்சம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்காத சிலர் நினைவுகளால் தேவையில்லாத துன்பத்தில் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் மந்தநிலை இருக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் யோகம், புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். உத்தியோகத்தில் பணி புரிபவர்கள் மந்தமாக காணப்படுவீர்கள்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. கனமான பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரித்து இருக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்ட யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்