இன்றைய ராசி பலன் – 30-3-2020

rasi palan - 30-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். ஒருசிலருக்கு சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி கொண்டு இருந்தால் அவைகளில் வெற்றி உண்டாகும். இவைகளில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய கூடிய நல்ல நாள் ஆகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான நல்ல நாள் ஆகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் கதவை தட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும் கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நல்ல நாள் ஆகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் நலம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். புதிய தொழில் முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும் சட்டென உணர்ச்சிவசப்படக்கூடிய நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஆன நிலையை அடைவீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்களை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரக் குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உருவாகும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தனவரவு உடன் கூடிய மகிழ்ச்சியான நல்ல நாள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு கால் வலி ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக சிந்தனைகளோடு செல்லும் அருமையான நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகன வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். யோகத்தில் இருப்பவர்களிடம் மாற்றத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்கிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகத்தை தரக்கூடிய நாளாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப சிந்தனை கொண்டு இருப்பார்கள். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும். அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும். பலருக்கு பிரயாணங்கள் செல்லும் முடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் என்றாலும் படித்த பாடத்தை மீண்டும் படிப்பது புதிய சிந்தனைகளை உருவாக்கும். உயர்கல்வி நோக்கி வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

கும்பம

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கல்வி நன்றாக இருக்கும். கல்வியில் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும். வெளிநாடுகளில் பண வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்கள் எண்ணம் ஈடேறும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் அமைதி தவழும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு. உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். விசா தொடர்பான காரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -