இன்றைய ராசி பலன் – 30-05-2021

rasi palan - 30-5-21

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் இடையூறுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். ஆரோக்கிய ரீதியாக விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பநிலை மாறி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் மூத்த நபர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. யோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவதற்கு வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் பணவரவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடலில் இருக்கும் சோர்வு நீங்கி புது உற்சாகம் பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்யம் சீராக இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண ரீதியான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோக ரீதியான பயணங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதி பெறுவதற்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபர்களின் தலையீடு இருப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்கால திட்டமிடல் மேலோங்கி காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் கொடுக்கும். திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செலவுகளை தவிர்த்தாள் பொருளாதார முன்னேற்றத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

மீனம்:
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த துறையில் இருந்தாலும் எடுக்கும் முடிவுகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் போது வருகை அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.