இன்றைய ராசி பலன் – 5-2-2021

rasi palan - 5-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளின் வழியே அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய நாளாக அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் எல்லாம் அனுகூலமான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் நடைபெறும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிலிருக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி புதிய ஒரு பாதையில் பயணிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசு வழி காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களின் தேவையை அறிந்து செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இதனால் பல நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்களை பிரச்சினைகளை உண்டு பண்ணுவார்கள் என்பதால் எச்சரிக்கை தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய வேடிக்கையான பேச்சாற்றல் மற்றவர்களை கவரும் விதமாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்க பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் பெருகும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மூலம் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வதன் மூலம் மன அமைதி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாமர்த்தியமான திறமையால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய புதிய திட்டங்களை தீட்டுவது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவின் முக்கியத்துவம் புரியும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களில் அடி எடுத்து வைப்பவர்களுக்கு அமோகமான வெற்றிகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைய இறை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் காணப்பட கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவது தான் நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட கூடிய நாளாக அமையும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -