இன்றைய ராசி பலன் – 8-08-2020

rasi palan - 8-8-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஆடை ஆபரணம் வாங்க கூடிய வாய்ப்புகள் வரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் ஒரு சிலர் லாபம் காணலாம். சுயதொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சரளமாக காணப்படும். அதனால் வீட்டுத் தேவைகள் அனைத்தையும் எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழி எந்த அளவிற்கு உண்மை என்பதை நீங்கள் உணரும் நேரம் இது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நல்ல ஒரு ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுயதொழில் மூலம் லாபகரமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதிலும் நிதானமாக ஒரு விஷயத்தை கையாள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். ஆடை ஆபரணம் மற்றும் பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். ஒரு சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. பயணங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும் நிலையில் திடீரென வெற்றியை நோக்கி பயணிக்கும்.எதிர்பாராத நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பணவரவு தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.ஒரு சிலருக்கு வண்டி வாகனம் போன்றவற்றால் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் எல்லாம் பனிபோல் விலகும். சுபகாரிய முயற்சிகள் அனுகூலமான பலன்கள் தரும்.மாணவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வெளியிடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மன தைரியம் இருக்கும்.பொருளாதார ரீதியாக பிரச்சினைகளை சந்தித்தாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி லாபம் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு சில விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது நடக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்கள் மூலம் தேவையற்றகுடும்பத்தில் இருக்கும் நபர்கள் மூலம் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தீவிரமான ஆலோசனை உங்கள் துணையுடன் நடத்தும் நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு புதிய உத்திகளை கையாள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப்பெறும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. அனுசரித்து செல்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.