இன்றைய ராசிபலன் 08-11-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi
மேஷராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமாக நாளாகத் தான் இருக்க போகின்றது. வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூடுதலாக சுப செலவுகளும் அதிகரிக்கத்தான் செய்யும். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை தேவை.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றபடி சொந்தத் தொழிலும் அலுவலகப் பணியும் நன்றாகச் செல்லும். முடிந்தவரை பண பரிமாற்றத்தில் இன்று ஈடுபடவேண்டாம். தொலைதூரத்திலிருந்து தொலைபேசி வழியாக நல்ல தகவல் வந்து சேரும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கின்றது. எதிர்பாராத வரவு என்றால், காசு சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம், அல்லது நல்ல செய்தியாக இருக்கலாம். இப்படியாக உங்கள் செவிகளுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தி வந்து சேரும் அவ்வளவுதான். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் இன்று எந்த செயலையும் புதிதாக தொடங்க வேண்டாம். தினந்தோறும் செய்ய வேண்டிய வேலையாக இருந்தாலும், பொறுமையோடு சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். முடிந்தவரை கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்து விட்டு வந்து, உங்களது வேலையை தொடங்குங்கள் நல்லது நடக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கப்போகின்றது. அலைச்சல் ஏற்பட்டாலும், எல்லா செயல்களிலும் வெற்றி உங்கள் பக்கம்தான். இருக்கும் துவண்டு போகாதீர்கள். உற்சாகத்தோடு செயல்படுங்கள். விடாமுயற்சி மட்டும் தான் இன்றைக்கு உங்களுக்கு துணை நிற்கும்.

கன்னி
kanni
கன்னி ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாகத்தான் இருக்க போகின்றது. நீண்டநாட்களாக நடத்தாமல் வைத்திருக்கும் வேலையை கூட இன்று தொடங்கலாம். ஞாயிற்றுக்கிழமை என்று சோம்பேறித்தனம் பார்க்காமல், கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல் பட்டால் உங்களை வெல்ல யாருமில்லை.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு தந்தைவழி உறவுகளால் எதிர்பாராத நன்மை ஒன்று நடக்கப்போகின்றது. உங்களால் முடிந்த உதவியை மத்தவங்களுக்கு செய்யப் போறீங்க! இன்று மதியத்திற்கு மேல் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொன் பொருள் சேர்க்கை உண்டு. பண்டிகைக்கு ஆடை ஆபரணங்கள் வாங்க வேண்டுமென்றால் தாராளமாக இன்று வாங்கிக்கொள்ளலாம். கையில் வைத்திருக்கும் பணத்தை மட்டும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி என்று இன்று யோகமான நாளாகத்தான் உங்களுக்கு அமையப் போகிறது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் உங்களது வேலையை நீங்கள் பார்த்தால் பிரச்சினையே இருக்காது. அடுத்தவர்கள் வேலையில் இன்றைக்கு தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. வீண்வம்பு வரும். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் வீட்டு விஷயங்களை அனாவசியமாக வெளியில் சொல்லாதீர்கள். மனைவியிடம் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் இன்று முழுவதும் உஷாராக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத வம்பு வழக்குகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிலும் பொறுமையாக சிந்தித்து செயல்பட்டு இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு தொடங்கினால் நன்மையே நடக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாகத்தான் இருக்க போகின்றது. எல்லா வேலையையும் உற்சாகமாக செய்து முடித்துவிட்டு, நல்ல ஓய்வு எடுக்க போறீங்க! நல்லா உறங்குங்கள். எல்லா கடன் பிரச்சனையும் தீர்வதற்கு ஒரு வழி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக வெளியே சென்று நேரத்தை கழிக்க போகிறீர்கள். கையில் இருக்கும் காசை மட்டும் கொஞ்சம் கரையும். மாதத்தின் முதல் வாரம் தானே சமாளித்து விடுவீர்கள். சேமிப்பும் கொஞ்சம் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.