இன்றைய ராசி பலன் – 9-3-2020

rasi palan - 9-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அதற்கான சாத்தியக்கூறுகள் நிலவும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான பதில் வரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் வெற்றி பெறுவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் செய்வதற்க்கென்றே ஒரு சிலர் இருப்பார்கள் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த பயம் பெற்றோர்கள் இடத்தில் மேலோங்கி காணப்படும். உயர் கல்வி பயில்பவர்கள் அங்கு சாதகமான சூழ்நிலை நிலவும். புதிய வாய்ப்புகள் இல்லம் நாடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரிகள் வழியே சில சங்கடங்கள் உருவாகலாம். தேவையற்ற வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாடிக்கையாளர்கள் இடத்தில் தங்களுடைய மதிப்பு உயரும். மாணவர்கள் தங்களின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதை ஒருமுகப்படுத்துவது முக்கியமாக இருக்கும். தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்ல பலன் தரும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு ஏற்பட்ட திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த சில காரியங்கள் தடையின்றி வெற்றி பெறும் நல்ல நாளாக இருக்கும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு என்பதால் பயணங்களை தாராளமாக மேற்கொள்ளலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். பெண்கள் சேமிப்பின் அருமையை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை கூடுமானவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நலம் தரும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லது. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு கிட்டும். எதிரிகள் இடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். அரசு வழி காரியங்களில் லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தனைகளை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்துவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சிறிது சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். எதிர்பாராத தனவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ள உங்களிடம் ஒரு சிலர் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.

மகரம்
மகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் மேலோங்கி காணப்படும். சமூகத்தில் மரியாதை கிட்டும். உங்களின் நாணயமான செயல்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாளாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உயர் கல்வி பயில்பவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்களினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு கிட்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு பலப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் வெற்றி காணலாம். பெண்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -