டாய்லெட்டை ஒருமுறை இப்படி சுத்தம் செய்து விட்டால், அடுத்த 1 வருடத்திற்கு மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

toilet
- Advertisement -

நம்முடைய வீட்டில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டிய இடங்களில் ஒன்று இந்த குளியலறையும் கழிவறையும் தான். அசுத்தமான பாத்ரூமிலிருந்து தான் நமக்கு நிறைய கிருமிகள் வெளியேறும். அதன்மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்வாய் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. கொசு தொல்லையும் அதிகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. துர்நாற்றம் வீசாமல் இருக்கவும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளை நாசம் செய்யவும் இப்படி ஒரு முறை உங்களுடைய பாத்ரூமை சுத்தம் செய்து பாருங்கள். அசுத்தமான கழிவறையை ஒரே நிமிடத்தில் சுத்தம் செய்ய நம் வீட்டில் சமையலறையில் இருக்கக்கூடிய இந்த ஒரு பொருள் போதும்.

சமையலறையில் இருக்கக்கூடிய பொருளா? அது எந்த பொருள்? என்று தானே யோசிக்கிறீங்க. சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு தான் அந்த பொருள். 10 லிருந்து 15 தோல் உரிக்காத பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 2 முட்டை ஓடு நமக்கு தேவைப்படும். முட்டையின் ஓட்டை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து விட்டால் அதில் இருக்கும் நீச்ச வாடை போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 15 பல் பூண்டு, 2 முட்டையின் ஓடுகள், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை தனியாக ஒரு பிளாஸ்டிக் கப்பில் மாற்றிக்கொள்ளுங்கள். இதில் 2 டேபிள்ஸ்பூன் – உப்பு போட்டு நன்றாக கலந்தால் நமக்கு சுத்தம் செய்ய தேவையான பேஸ்ட் தயாராகிவிட்டது. சால்ட் உப்பு கல்லு உப்பு எந்த உப்பு வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த பேஸ்டை உங்களுடைய உப்பு கரை படிந்த டாய்லெட்டின் மேலே தடவி ஒரு நார் வைத்து தேய்த்தாலே போதும். உப்பு கரை அழுக்கு, முழுவதும் நீங்கிவிடும். ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது. ஸ்டீல் நார் வைத்து தேய்க்க வேண்டும் என்று அவசியமும் இல்லை. உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும். நீண்ட நாட்களாக படிந்திருந்த உப்பு கரை அனைத்தும் சுத்தமாக போய்விடும். (இறுதியாக தண்ணீரை ஊற்றி டாய்லெட்டை 10 நிமிடத்தில் பளிச்சென சுத்தம் செய்து முடித்து விடலாம்.)

- Advertisement -

மாதத்தில் இரண்டு நாட்கள் இப்படி உங்களுடைய கழிவறையை கழுவினாலே போதும். இந்த மெத்தட் ட்ரை பண்ணி உங்களுடைய கழிவறையை சுத்தம் செய்து வர வருடக்கணக்கானாலும் உங்களுடைய கழிவறை எந்த ஒரு கரையும் படியாமல், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக பிரஷ்ஷாக இருக்கும்.

இதை பேஸ்ட் பயன்படுத்தி உப்பு கரை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுவர், உப்பு கரை படிந்த தரை, உப்பு கரை படிந்த பாத்ரூம் கதவு, சமையலறை மேடை, வாஷ்பேஷன் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து கொள்ளலாம். அதில் நீண்ட நாட்களாக படிந்திருந்த உப்புகள் சீக்கிரமே நீங்கிவிடும். டைல்ஸ்க்கு மட்டுமல்ல மார்பில் கல்லில் கூட இந்த பேஸ்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில பேருக்கு முட்டை சாப்பிடும் பழக்கம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த முட்டை ஓட்டிற்கு பதிலாக கோலமாவு பொடியை இந்த கலவையோடு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பூண்டோடு சேர்த்து கோலமாவு பொடியை அரைக்கக்கூடாது. உப்பு சேர்க்கும்போது கூடவே கோலமாவு பொடியை 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவோ கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி கழிவரையை கழுவி முயற்சி செய்து பார்க்கின்றோம். இந்த டிப்ஸ் ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன். ரிசல்ட் உங்கள் கண்முன்னே தெரியும்.

- Advertisement -