என்ன, டாய்லெட்டை ஒரு வருடத்திற்கு கழுவவே வேண்டாமா? வருஷத்திற்கு ஒருமுறை கழுவினால் போதுமா? என்று சந்தோஷ படாதீங்க. கழிவறையை தினம் தினம் சுத்தம் செய்தால் தான் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். கஷ்டப்பட்டு தேய்த்து உப்பு கறை போவதற்கு இனி சிரமப்பட வேண்டாம். அதற்காகத்தான் இன்று ஒரு எளிமையான வீட்டு குறிப்பு குறைந்த செலவில் பார்க்கப் போகின்றோம்.
நீங்களும் இந்த குறிப்பை படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிலும் பயன்படுத்தி பாருங்கள். டாய்லெட்டை சுத்தம் செய்வதில் மன நிறைவு இருந்தால், தேவைப்படும்போது இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கை வலிக்காமல் டாய்லெட் கழுவ இதுவும் ஒரு ஐடியா. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த வீட்டுக்குறிப்பு என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
டாய்லெட்டை சுத்தம் செய்ய ஈசி ஐடியா
இந்த குறிப்புக்கு நமக்கு முதலில் தேவைப்படப் போகும் பொருள் காலாவதியான மாத்திரை. குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு எல்லாம் சென்றால், நிறைய காய்ச்சல் மாத்திரை, வயிற்று வலி மாத்திரை எல்லாம் கொடுப்பாங்க. அந்த மாத்திரையை வாங்கி வந்து ஓரிரு நாட்கள் சாப்பிட்டு விட்டு மீதியை குப்பையில் தான் தூக்கி போடுவோம்.
அப்படி கணக்கில்லாத மாத்திரைகள் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், அதை நீங்கள் வீணாக குப்பையில் போடாமல் இப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் நான்கிலிருந்து ஐந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேப்பரில் வைத்து அதை தூளாக நசுக்கிக் கொள்ளவும்.
ஒரு பிளாஸ்டிக் ஜக்கில் தூள் செய்த மாத்திரை, துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர் ஏதோ ஒன்று 1 ஸ்பூன் போட்டு ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு ஒரு லிக்விட் கிடைத்திருக்கும். இந்த லிக்விடை உங்களுடைய டாய்லெட் முழுவதும் ஸ்ப்ரே செய்து 10 லிருந்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டுடுங்க.
இந்த தண்ணீரில் டாய்லெட் நன்றாக ஊறட்டும். பிறகு பிரஷை வைத்து லேசாக டாய்லெட்டை தேய்த்து சுத்தம் செய்தாலே உங்கள் டாய்லெட்டில் இருக்கும் கிருமிகளும் செத்துப் போகும். உப்பு கறையும் நீங்கும். மீண்டும் மீண்டும் உப்பு கறை படியாமலும் பாதுகாப்பாக இருக்கும். மாத்திரையில் இவ்வளவு பவரா என்று யோசிக்காதீங்க. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே டாய்லெட் கழுவுவதில் நல்ல வித்தியாசம் தெரியும்.
பேராசிட்டமல், டோலாபர், ஃபெப்பானில், குரோசின் எந்த மாத்திரையை வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த மாதிரி டாய்லெட்டை சுத்தம் செய்தால் பூச்சி பொட்டுகள் தொல்லையும் உங்களுக்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: எலியை வீட்டை விட்டு எளிமையாக விரட்டி அடிக்க குறிப்பு
ஈசி மெத்தட் தாங்க. காலாவதியான மாத்திரையை குழந்தைகள் கையில் எட்டாமல் அலமாதியின் மேலே எடுத்து வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து இப்படி டாய்லெட் பாத்ரூம் கழுவ பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லத்தரசிகளுக்கு இந்த வீட்டு குறிப்பு நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.