எலியை வீட்டை விட்டு எளிமையாக விரட்டி அடிக்க குறிப்பு

rat
- Advertisement -

உங்க வீட்டிலேயும் எலியின் தொல்லை அதிகமாக இருக்குதா? அட்டகாசம் தாங்க முடியவில்லையா. அதிலும் வீட்டில் சாப்பிட்டு சாப்பிட்டு, ருசி கண்ட எலிகள் நம் வீட்டை விட்டு அவ்வளவு எளிதில் போகாது. என்னதான் விரட்டியடித்தாலும் திரும்பவும் திரும்பவும் தன்னுடைய மோப்ப சக்தியால், ஞாபக சக்தியால் நம் வீடு தேடி வந்துவிடும். எலிகளுக்கு ஞாபக சக்தி ரொம்ப ரொம்ப அதிகம்.

ஒருமுறை உங்க வீட்டில் இந்த பொருளை வச்சு பாருங்களேன். எலி இதை ஒரு முறை சாப்பிட்டு விட்டால் மீண்டும் உங்கள் வீட்டு பக்கம் தலை வைத்து கூட படுக்காது. அது எந்த பொருள் அதை எப்படி தயார் செய்து வைப்பது, பயனுள்ள ஒரு வீட்டு குறிப்பை இந்த பதிவின் மூலம் முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

எலியை விரட்டி அடிக்க எளிய வீட்டு குறிப்பு

முதலில் ஒரு சின்ன பிளாஸ்டிக் கப் எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சமாக இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு போட்டு, அதில் கொஞ்சமாக வினிகர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய் அளவு இந்த உருண்டைகள் இருக்கட்டும். இப்போது இதை அப்படியே வைத்து விடுங்கள். (உங்க வீட்டில் வினிகர் இல்லை என்றால் டெட்டால் அல்லது ஃபினாயில் ஊற்றி கூட சப்பாத்தி மாவை பிசையலாம்.)

அடுத்து கப்பில், ஒரு கட்டி கற்பூரத்தை நசுக்கி தூள் செய்து போட்டுக் கொள்ளுங்கள். இதில் பல் தேய்க்கும் பேஸ்ட் போட்டு, நன்றாக கலந்து விடுங்கள். பல் தேய்க்கும் பேஸ்ட், கட்டி கற்பூரம் இரண்டையும் கையைக் கொண்டு பிசைந்து வைத்தால், பிசுபிசுவென ஒரு கலவை நமக்கு கிடைக்கும். அதுவும் அப்படியே இருக்கட்டும். இப்போது கையை கழுவி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக முதலில் சின்ன சின்ன மாவு உருண்டைகளை தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அதை உங்கள் கைகளாலேயே தட்டிக் கொள்ளுங்கள். பூரி போல கொஞ்சம் தடிமனாக தட்டிக் கொள்ளுங்கள். இதன் உள்ளே பூரணம் வைப்பது போல தயார் செய்து வைத்திருக்கும் கற்பூரம் பேஸ்ட் கலந்த கலவையை வைத்து உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள்.

இந்த சின்ன சின்ன உருண்டைகளை வைத்து தான் எலியை வீட்டை விட்டு விரட்டி அடிக்க போகின்றோம். இந்த உருண்டைகளை இரவு நேரத்தில் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, எலிகள் அதிகம் நடமாடும் சமையலறை பகுதியில் வையுங்கள். சில பேர் வீடுகளில் வாஷிங் மெஷினுக்கு கீழே எலி வந்து தங்கும் அங்கே வைக்கலாம்.

- Advertisement -

சில பேர் வீட்டில் பால்கனியில் செடி கொடிகள் இருக்கக்கூடிய இடத்தில் எலிகள் வரும். அந்த இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்க வீட்டில் எங்க எலி வருமோ அங்க இத வச்சிடுங்க.‌ எலிகள் இதை உங்கள் வீட்டுக்கு வந்து ஒரு முறை சாப்பிட்டு விட்டால் போதும். மறுமுறை உங்கள் வீட்டு பக்கம் வந்து தலை கூட வைக்காது.

எலிகளுக்கு இந்த கற்பூரவாசம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. இதை சாப்பிட்டால் எலி செத்தும் போகாது. இதை சாப்பிட்ட இடத்திற்கு எலி நிச்சயம் மீண்டும் வராது. உங்க வீட்டில் வேண்டும் என்றால் முயற்சி செய்து பாருங்கள். சில பேர் வீடுகளில் காருக்குள் எல்லாம் எலி வந்து எதையாவது கடித்து வைக்கும்.

இதையும் படிக்கலாமே: அடுப்புக்கரி இல்லாமல் சாம்பிராணி தூபம் போடுவது எப்படி?

அப்படி என்றால் காரிலும் கூட நீங்கள் இந்த உருண்டையை வைக்கலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதை. இரவு நேரத்தில் இதை வைத்து விடுங்கள். வைத்த இடத்தை கவனம் வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை எலி அதை சாப்பிட்டு விட்டதா என்று பாருங்கள். எலி சாப்பிடவில்லை என்றால் எடுத்து குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். எளிமையான இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல எலி தொல்லை அதிகமாக இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -