பிரிட்ஜில் தோசை மாவு தீர்ந்து விட்டதா? கவலை வேண்டாம். 5 நிமிடத்தில் இந்த தோசை மாவை தயார் செய்து, தோசை வார்க்கலாம்.

red-dosa
- Advertisement -

இட்லி தோசை மாவு இல்லாத சமயத்தில் என்ன டிபன் செய்வது என்ற குழப்பம் நிச்சயமாக ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இருக்கும். தோசை மாவு, இட்லி மாவு இல்லை என்றால் சட்டென ரெடிமேடாக 5 நிமிடத்தில் இந்த மாவை தயார் செய்து, இந்த சிவப்பு தக்காளி தோசையை அசத்தலாக சுட்டு எடுக்கலாம். உடனடி தக்காளி தோசை எப்படி செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

red-dosa1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மிக்ஸி ஜாரில், பழுத்த 3 தக்காளி, தோல் உரித்த பூண்டு பல் 3, சிறிய துண்டு இஞ்சி, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 3 பல், வர மிளகாய் – 6, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மொழுமொழுவென அரைத்து இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அதே மிக்ஸி ஜாரில் ரவை – 1 கப், கோதுமை மாவு – 1/2 கப், 3 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய், சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி இதையும் மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவை ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். (ரொம்பவும் தண்ணீராக கரைத்துக் கொள்ள கூடாது.)

sweet

இறுதியாக 1/2 ஸ்பூன் சோடா உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை மாவை கலந்து, ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, மிதமான சூடு ஆனவுடன் தயாராக இருக்கும் மாவை எடுத்து தோசை கல்லில் வார்க்க வேண்டும். இந்த தோசை, கல் தோசை அளவிற்கு வார்த்தால்தான் சுவையாக இருக்கும். மெல்லிசாக தோசையை வார்க்க முடியாது. கல் தோசை போல மாவை தோசைக்கல்லில் வார்த்துவிட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் இதை சிவக்க வேக வைக்க வேண்டும். சிவக்கும் போது, ஆப்பம் போல மேலே மூடி போட்டு சிவக்க வைக்க வேண்டும். இந்த தோசையை திருப்பிப் போட வேண்டும் என்ற அவசியம் கூட தேவையில்லை.

red-dosa3

தோசை மேலே நன்றாக வெந்து, அடியில் நன்றாக சிவந்து, தோசை தயாரானதும் இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய் சட்னியை வைத்து பரிமாறுங்கள். பூதுவிதமான சுவையில் சூப்பரான தக்காளி ரவை தோசை உடனடியாக தயாராகி இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உடனடியாக நாளைக்கு காலையிலேயே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -